New Life Society

Orissa - English - ஒரிசா - தமிழ் PDF Print E-mail
Wednesday, 25 March 2009 05:19
Article Index
Orissa - English
ஒரிசா - தமிழ்
All Pages

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்

மற்றும்

புதுவாழ்வு சங்கம் சார்பாக

ஒரிஸ்ஸா கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவி திட்டங்கள்

கடந்த 2008 ஆகஸ்ட் மாதத்தில் ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களக்கு விரோதமாய் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500க்கும் அதிகமான ஆலயங்கள் இழக்கப்பட்டதுமம், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதும் நமக்குத் தெரிந்ததுதான்!

பாதிக்கப்பட்ட அந்த தேவப் பிள்ளைகளுக்காக தொடர்ந்து நம் இயேசு விடுவிக்கிறார் ஜெபக் குழுவில் ஜெபித்து வந்தோம். ”நேரில் சென்று, பாதிக்கப்பட்ட தேவப் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லி, ஜெபித்து வர வேண்டும்“ என்பது, என் இருதயத்தின் ஏக்கமாக இருந்தது.

2009 மார்ச் 2,3,4 தேதிகளில் ஒரிஸ்ஸா கந்தமால் மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, ஆறுதலான வார்த்தைகளைப் பேச, அவர்களோடு சேர்ந்து ஜெபிக்க, கர்த்தர் கிருபை கொடுத்தார்.

“அவர்களுக்கு என்ன தேவை? என்று விசாரித்தபோது, அவர்கள் அனுதின சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சிரமப்படுகிறதை அறிந்தோம். உடனடியாக, தினமும் ஒரு வேளையாவது நல்ல உணவிற்கு உதவி செய்யத் தீர்மானித்து, நம் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் மற்றும் புதுவாழ்வு சங்கத்தின் மூலமாக (2009) மார்ச், மூன்றாவது வாரத்திலிருந்து உதவிகள் செய்து வருகிறோம்.

நாம் செய்ய இருக்கும் இந்த நிவாரணப் பணிகளை ஒழுங்கும், கிரமமாக செய்து முடிக்க, ஒரு கமிட்டி அமைக்கக் கர்த்தர் கிருபை செய்தார். இந்த கமிட்டியில் அங்குள்ள சில சபைப் போதகர்கள், ஒரு இஞ்சினீயர், ஒரு கல்லூரி முதல்வர், மற்றும் நம் மிஷனொரியும் இடம் பெற்றிருக்கிறார்கள்.இவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் உபத்திரவப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து நிற்கிற இந்த மக்களுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்!

முதலாவது, ஜெபம் பண்ணுங்கள். தினமும் அந்த மக்களுக்காக ஒரு சில நிமிடங்கள் ஜெபியுங்கள்.

இரண்டாவது, உதவி செய்யுங்கள். நீங்கள் கட்டாயம் அந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

நாம் அந்த மக்களுக்கு உதவி செய்ய, மூன்று விதமான திட்டங்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். இந்த திட்டங்களை நிறைவேற்ற, உங்கள் உதவி தேவை. நீங்கள் கட்டாயம் இந்தத் திட்டங்களில் பங்கு பெற வேண்டும்.

மன்னா திட்டம்

உணவில்லாமல் கஷ்டப்படும் அந்த மக்களுக்கு உணவளிப்பது. நான்கு முகாம்களில் இருக்கும் 680 குடும்பங்களுக்கும், மாதம் ரூ.1,000 அளவிற்கு உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கும் திட்டம் (அரிசி 50 கிலோ, பருப்பு 3 கிலோ, எண்ணெய் 1 கிலோ, மசாலாப் பொருட்கள் ரூ.50-க்கு, சீனி 2 கிலோ, டீ தூள் 1 கிலோ, முட்டை 20).                

 இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, இந்தப் பொருட்களை தேவ ஊழியர்கள், நாம் அமைத்திருக்கும் கமிட்டியில் உள்ளவர்கள் நேரழயாக அங்கு கொண்டுபோய் கொடுத்து, அவர்களோடு சேர்ந்து ஜெபித்து விட்டு வருவார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு, நாம் இந்த உதவியை அந்த மக்களுக்குச் செய்ய வேண்டியதிருக்கும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, மாதம் ரூ.1,000 கொடுக்கக்கூடிய 680 தேவப் பிள்ளைகள் தேவை.

நீங்கள் ஒரு குடும்பத்திற்கான தேவையை (மாதம் ரூ.1,000 வீதம்) ஒரு வருடத்திற்குப் பொறுப்பெடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 அனுப்பலாம், அல்லது ரூ. 12,000 மொத்தமாக ஒரு வருடத்திற்கு அனுப்பலாம். ஜெபியுங்கள்.

கானான் திட்டம்

இடிந்து கிடக்கும் ஆலயங்களைக் கட்டிக் கொடுப்பது, இடிந்த வீடுகளை செப்பனிட உதவி செய்வது இந்தத் திட்டம். சிலருக்கு வருமானத்திற்கு வழி செய்து கொடுப்பது. தையல் வேலை செய்து பிழைப்பு நடத்திய சிலர், தங்கள் தையல் மிஷினை இழந்து விட்டார்கள். இப்படிப்பட்ட ஆறு பேருக்கு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்து, வருமானத்திற்கு வழி செய்வது.

நாங்கள் போன இடத்தில், இடிக்கப்பட்ட சுமார் 30 ஆலயங்களைக் கண்டுபிடித்து, அதன் விபரங்களை சிறிய அளவில் நாம் கட்டிக் கொடுக்க, சுமார் 2 லட்சம் ரூபாய் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறோம். நீங்கள் தொழில், அல்லது வியாபாரம் செய்கிறவராயிருந்தால், உங்கள் சார்பாக ஒரு ஆலயம் கட்டிக் கொடுக்கலாம். நம்முடைய நேரடிப் பார்வையில் நாம் இதைக் கட்டிக் கொடுப்போம். ஆலயம் கட்ட ரூ. 2 லட்சம் கொடுக்கக்கூடிய 30 பேர் தேவை. இதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். எங்கள் குடு்ம்பத்தின் சார்பாக, ஒரு ஆலயத்தைக் கட்டத் தீர்மானித்திருக்கிறோம். இன்னும் 29 பேர்தான் தேவை. உடனே எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

“பிசராமா“ என்ற கிராமத்திலுள்ள ஆலயத்தையும், இடிக்கப்பட்டுக் கிடக்கும் 23 வீடுகளையும் செப்பனிட்டுக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம். ஒரு வீட்டை செப்பனிட்டுக் கொடுக்க ரூ. 50,000 செலவாகும். மரத்தடியில் இருக்கும் விசுவாசி, தங்கள் வீட்டில் குடியேற உதவுங்கள். ரூ. 50,000 கொடுக்கிற 23 பேர் தேவை.

ஸ்டீபன் காலனி திட்டம்

கிறிஸ்துவுக்காக தங்கள் கணவரை இரத்த சாட்சிகளாக மரிக்கக் கொடுத்த 52 விதவைகளுக்குக் சிறிய வீடுகளைக் கட்டிக் கொடுத்து, காலனி அமைக்கும் திட்டம். சிறிய ஒரு வீடு கட்ட ரூ. 50,000 ஆகும். நீங்கள் உங்கள் சார்பாக ஒரு விதவை சகோதரிக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம். அவர்கள் நிலத்தில் வேலை செய்து, தங்கள் வாழ்வைக் கவனித்துக் கொள்ள, சுய வேலை வாய்ப்புத் திட்டத்தையும் ஏற்படுத்த இருக்கிறோம். அதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

இப்படி, கர்த்தர் கொடுத்த இந்தத் திட்டத்தில் நீங்களும் இணைந்து செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறேன். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்குச் செய்கிற உதவி, இயேசுவுக்கே செய்கிற உதவி. பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாக இருக்கும்.

இந்த மக்களுக்கு வெறும் உலகப் பிரகாரமான உதவிகள் செய்வது மட்டுமல்ல, நம்முடைய மிஷனெரிக் குழுவினரை அவர்கள் மத்தியில் அனுப்பி, அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஸ்திரப்பட, கூட்டங்களை, உபவாச ஜெபங்களை நடத்தவும் ஒழுங்கு செய்திருக்கிறோம்.

ஒரிஸ்ஸாவில் ஒரு எழுப்புதலை ஆண்டவர் கட்டளையிடப் போகிறார்! அதற்காகத்தான் தன்னுடைய திருச்சபைக்கு இந்த உபத்திரவத்தை ஆண்டவர் அனுமதித்திருக்கிறார். இனி வரும் காலங்களில் ஒரிஸ்ஸாவின் எழுப்புதல், வட இந்தியாவை அசைக்கும். இதற்காக ஜெபியுங்கள்.

இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.

     -    மத்தேயு 25-40 

 

 



Last Updated ( Thursday, 30 April 2009 10:41 )
 

Who's Online

We have 1 guest online

Visitor Status

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday22
mod_vvisit_counterYesterday18
mod_vvisit_counterThis week40
mod_vvisit_counterThis month245
mod_vvisit_counterAll8227

Orissa

pic2.jpg

Orissa Afflicted People

  • An Image Slideshow
  • An Image Slideshow
  • An Image Slideshow
  • An Image Slideshow
  • An Image Slideshow
  • An Image Slideshow
Copyright © 2009 New Life Society. All Rights are Reserved.