Logo

புது வாழ்வு சங்கம் PDF Print E-mail
Tuesday, 24 March 2009 07:08
புது வாழ்வு சங்கம்


அன்பானவர்களே,

பிரச்சனைகளும், பழமையும் நிறைந்த இந்த உலகத்தில், கட்டுண்டவர்களுளாகவும், பசி, பிணியால் அவதிப்படுகிறவர்களாகவும் உள்ளவர்களே அநேகர். உழைக்க மனதில் திடமுண்டு, சரீரத்தில் திடமில்லை, நேர்மையாக வாழ விருப்பமுண்டு, சமுதாயம் விடவில்லை. தனிமரமாக விடப்பட்டாலும் சுயமாக வாழ விரும்புகிறேன், பாதுகாப்பில்லை. சரீரத்தை வருத்தி உழைத்தும் சம்பாத்தியம் நிற்கவில்லை. எங்கோ கரைந்து கொண்டு போகிறது என்ற மனதின் அங்கலாய்ப்புகள் நிறைந்த உலகம் இது. மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று ஆண்டவர் கூறியதன் மூலம் இந்த மனித குலத்தின் மீதுள்ள தம்முடைய கரிசனையை வெளிப்படுத்துகிறார். இவருடைய இந்த அன்பின் கட்டளையை மனதில் கொண்டு பசியுள்ளவர்களுக்கு போஜனம் கொடுக்கவும், தாகமாய் உள்ளவர்களின் தாகம் தீர்க்கவும், அந்நியராய் இருப்பவர்களை சேர்த்துக் கொள்ளவும், வஸ்திரம் இல்லாதவர்களுக்கு வஸ்திரங் டிகாடுக்கவும், வியாதி உள்ளவர்களை விசாரிக்கவும், காவலிலுள்ளவர்களைப் பார்க்கவும் (பரி. வேதாகமம் மத். 25-40) இந்த புதுவாழ்வுச் சங்கமானது 08.01.1995 ஆம் ஆண்டு நாலுமாவடி, இயேசு விடுவிக்கிறார் வளாகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

இது தமிழ்நாடு அரசாங்க சங்கங்களின் விதி 27-75-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு 12-95 என்கிற பதிவெண்ணுடன் இயங்கி வருகிறது. இந்த புதுவாழ்வுச் சங்கமானது தமிழகத்தின் பல பகுதிகளிலும், அந்தந்த பகுதியின் தேவைக்கெற்ப தேவையான சமுதாய நலத் திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

(அ) பெதஸ்தா இலவச மருத்துவமனை
இந்த மருத்துவமனை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 2 மணி முதல் 6 மணி வரை இயங்கி வருகிறது. தூத்துக்குடிநெல்லை, குமரி மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வருகிறார்கள். வாரந்தோறும் சுமார் 150 முதல் 175 வரை நோயாளிகள் வருகிறார்கள்.

இவர்களுக்கு...........
இயேசுவின் அன்பு போதிக்கப்படுகிறது.
சுத்தமான வாழ்க்கைக்குரிய வழிகள் கற்பிக்கப் படுகிறது.
ஜெபத்துடன் மருத்துவர்கள் விசாரித்து சிகிச்சை அளிக்கிறார்கள்.
தேவனுடைய பிள்ளைகளால் ஆலோசனைகள் கொடுக்கப்படுகிறது.
மருந்துகள் அத்தனையும் இலவசம்.

(ஆ) அவ்வப்போது தோல், கண் வியாதிகளுக்கான சிறப்பு முகாம்களும், சர்க்கரை நோய் கண்டறிதலுக்கான முகாம்களும் நடத்தப்படுகின்றன.

(இ) சமயம் வாய்க்கும்போது அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

முக்கியமாக...........
மாந்தோறும் சுமார் 50 காச நோயால் பாதிக்கப் பட்டோர் பயனடைகிறார்கள்.

சுமார் 20 தொழு நோயாளிகள் பயன் அடைகிறார்கள்.
சுமார் 40 சர்க்கரை நோயுடையவர்கள் பயன் அடைகிறார்கள்.

இது தவிர வயிற்றுப் பூச்சியினால் வரும் நோய்கள், ஆஸ்துமா, இரத்த சோகை, தோல் வியாதிகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை வந்து பயனடைகிறார்கள்.

(ஈ) தொற்காள் தையற் பள்ளி

நாலுமாவடியில் தொற்காள் மகளிர் தையற் பயிற்சி நிலையமானது இயங்கி வருகிறது. இப்பள்ளி 1995 ஜுலை மாதம் முதல் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த வருடத்திற்கான ஊசி வேலை, உடை தயாரித்தல் போன்ற பிரிவில் பயிற்சி பெற்று வரும் 16 மாணவிகளுக்கும் 1996 ஜுன் மாதம் அரசு தேர்வு துறையினால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

(உ) நலிந்தோர் புதுவாழ்வுத் திட்டங்கள்

இவற்றின் மூலம் முதல்படியாக உலக ஊனமுற்றோர் தினமாகிய 1996 மார்ச் 20-ம் தேதி 10 உடல் ஊனமுற்றோர்களுக்கு இலவச மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.

இன்னும்,
மனவளர்ச்சி குறைந்தோர், முதியோர், அனாதைச் சிறுவர், சிறுமியர் பராமரிப்பு, விதவைகள் புதுவாழ்வுக்காக பலநலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த உள்ளோம்.

இன்னும் சில ஆண்டுகளுக்குள் மாவட்ட அளவிலான பெரிய மருத்துவ முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.

நிகழ்கால தேவைகள்

பெதஸ்தா இலவச மருத்துவமனை மூலம் ஏழை, எளிய ஜனங்களுக்கு மருந்துகள் கொடுத்து உதவ மாதத்திற்கு ரூ.20,000
தொற்காள் தையல் பள்ளியை நிர்வகித்து நடத்த மாதத்திற்கு ரூ.5,000, பலவித புதுவாழ்வுத் திட்டங்களுக்காக மாதம் ரூ.10,000
புதுவாழ்வுச் சங்கத்தின் அலுவலக செலவினங்களுக்காக மாதம் ரூ.1,000.

வருங்கால எண்ணங்கள்

சமுதாயத்தின் நிலைமையையும், நம் நாட்டின் சூழ்நிலையையும் பார்க்கும்போது நாம் செய்வதெல்லாம் மிகவும் சொற்பமானவைகளே. இன்னும் பல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், செயல்படுத்தப்பட வேண்டும். இப்போது செய்கிறவைகளும் நிறைவாய்ச் செய்யப்பட வேண்டும்.

அருமையான சகோதரனே! சகோதரியே!
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!!
இதில் பங்கு கொள்ள விருப்பமுண்டானால்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

செயலாளர்,
புதுவாழ்வுச் சங்கம்,
தேவனுடைய வீடு காம்பவுண்டு,
நாலுமாவடி - 628 211.
தூத்துக்குடி மாவட்டம்.

Last Updated ( Wednesday, 25 March 2009 04:36 )
 

Who's Online

We have 9 guests online

Visitor Status

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday25
mod_vvisit_counterYesterday31
mod_vvisit_counterThis week136
mod_vvisit_counterThis month920
mod_vvisit_counterAll115719

New Life Society

Nlsacademy1.gif

Advertisement

Updated Sites:
KIDS - Jolly Time
Hai, Kids... You have a exclusive site here. Click to venture into it...

Click Here...

Army of God Prayer Network
Are you interested in intercessory prayers? This is the site for you... Click for registration....

Click Here...

YouthWorld
A special site for adolescence people! For Life boosting spiritual informations.

Click here...

Copyright © 2009 New Life Society. All Rights are Reserved.